கம்பேரிஸன் கோவாலு!

த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க, அழகாய் அயர்ன் செய்த சொக்காய் போட்டு டெல்லிக்கு விமானம் ஏறிய ஓ.பி.எஸ் அண்ட் டீம், சொக்காய் கசங்குவதற்குள் கண்ணைக் கசக்கிக்கொண்டு வந்து நின்றது. நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பு நடைபெறாமல் போகவே, ‘`எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’’ என நெஞ்சை இரும்பாக்கிக் கொண்டு வசனம் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ்.

உண்மையில், அந்த சிச்சுவேஷனுக்கு அண்ணாவின் வசனத்தைவிட `‘போங்க தம்பி, ஊருக்குள்ளே போய் கேட்டுப்பாருங்க. நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது. எவ்ளோ அடி வாங்குனாலும் சத்தமே வராது, ஓடினது கிடையாது’’ என வடிவேலுவின் வசனத்தைப் பேசியிருந்தால்தான் சரியானதாக இருந்திருக்கும். இதேபோல், வேறு என்னென்ன மேட்டர்களுக்கு என்னென்ன வசனங்கள் பேசலாமெனப் பரிந்துரைக்கிறான் இந்தக் கோவாலு...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick