கல்வீச்சா... காதலா? - லாரி ஸ்ட்ரைக் மரண மர்மம் | Lorry cleaner death mystery - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கல்வீச்சா... காதலா? - லாரி ஸ்ட்ரைக் மரண மர்மம்

லாரி ஸ்ட்ரைக் நேரத்தில், தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் காய்கறி ஏற்றிச்சென்ற லாரியின் கிளீனர் கல்வீச்சில் உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால், காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  

கோவை மாவட்டம், அன்னூர் அருகேயுள்ள வடக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய். மேட்டுப்பாளையத்தில் காய்கறி ஏற்றிச்செல்லும் லாரியில் கிளீனராக வேலை செய்துவந்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை 20-ம் தேதி லாரிகள் ஸ்ட்ரைக் தொடங்கியது. அந்த நேரத்தில், மேட்டுப்பாளையத்திலிருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்குச் சென்ற லாரிமீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றதாகவும், அதில் கிளீனர் விஜய் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. பிறகு, லாரியின் டிரைவரான நூருல்லா முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறியதால், விஜய் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick