“கார்டன் நகையில் பங்கு கொடு!”

ஜெயலலிதாவின் பணிப்பெண்ணைச் சுற்றும் மர்மங்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்தவர் அந்த இளம்பெண். ‘‘ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கார்டனிலிருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை எடுத்துவந்து தன் சொந்த ஊரில் ஆடம்பர பங்களா போன்ற வீட்டைக் கட்டிவருகிறார்’’ என்று அவர்பற்றிப் பேச்சுகள் கிளம்பிய நிலையில், அந்தப் பெண்ணுக்கு மிரட்டல்களும் வருகின்றன. ‘‘போயஸ் கார்டனில் வேலை பார்த்தவங்க, வீடெல்லாம் கட்டக் கூடாதா?’’ என்று கேட்கிறது அந்தப் பணிப்பெண்ணின் குடும்பம்.

ஒரத்தநாடு அருகே உள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன்-செல்வராணி தம்பதி. இவர்களின் மகள் பூமிகா. சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் மூலம், இவர் 2012-ம் ஆண்டு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு உணவு தொடங்கி உடை வரையில் அனைத்தையும் எடுத்துத்தருவது உள்ளிட்ட வேலைகளைச் செய்துவந்தார். ஜெயலலிதா கண் அசைத்தாலே அவருக்கு இதுதான் தேவை என அறிந்து அதைக் கொடுப்பாராம். இதனால் பூமிகாவை, ‘சுட்டிப் பெண்’ என ஜெயலலிதாவே பாராட்டுவாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick