புறப்படுகிறார்கள் ஸ்மார்ட் பத்திரிகையாளர்கள்! | Vikatan Student Reporter training scheme 2018-19 - Junior vikatan | ஜூனியர் விகடன்

புறப்படுகிறார்கள் ஸ்மார்ட் பத்திரிகையாளர்கள்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19

மிழ் ஊடக உலகின் பிரதான ஆளுமைகள் பலரின் முதல்படி, விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம். இத்திட்டத்தின் 2018-19-ம் ஆண்டு படை தயாராகிவிட்டது. ஒரு கையில் பேனாவும் மறுகையில் ஸ்மார்ட்போனுமாக உற்சாகத்துடன் களமிறங்கியிருக்கிறது புதிய படை. இந்த ஆண்டு திட்டத்துக்கு விண்ணப்பித்த 2,136 மாணவர்களில், பல கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ‘360 டிகிரி’யில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவிருக்கும் இந்த இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் ஜூலை 27, 28, 29 தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கிறது.

புதிய கனவுகள், இனிய இலக்குகளுடன் நெடிய பயணத்துக்கு இளையவர்களை வாழ்த்தி வரவேற்கிறான் விகடன்!

- ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick