72 கி.மீ... 3:15 மணி நேரம்! - புல்லட் ரயில் யுகத்தில் ஓர் ஆமை வேக ரயில்

ந்த ஆளில்லா ரயில்வே கேட் திறந்து கிடக்கிறது... ஆமை வேகத்தில் ஒரு ரயில் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் எந்தப் பதற்றமுமின்றி கார், பைக், ஆட்டோ, சைக்கிள் என அனைத்து வாகனங்களும் ரயில்வே கேட்டைக் கடந்துசெல்கின்றன. அந்த ரயில் திடீரென ரயில்வே கேட்டுக்குச் சற்று முன்பே நிற்கிறது. ரயில் இன்ஜினிலிருந்து ஒருவர் இறங்கிவந்து ரயில்வே கேட்டை மூடுகிறார். ரயில் நகர்கிறது. ரயில்வே கேட்டைக் கடந்ததும், ரயில் மீண்டும் நிற்கிறது. கடைசிப்பெட்டியிலிருந்து ஒருவர் வந்து ரயில்வே கேட்டைத் திறந்துவிட்டு, ரயிலில் ஏறிக்கொள்கிறார். ரயில் புறப்படுகிறது. இப்படியொரு வீடியோ, சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வைரலாக வலம்வந்தது.

இந்தப் ‘புகழ்பெற்ற’ ரயில்... காரைக்குடி - பட்டுக்கோட்டை ரயில் தடத்தில் இயக்கப்படும் பாசஞ்சர் ரயில். மணிக்கு 320 கி.மீ வேகத்தில் பறக்கும் புல்லட் ரயில்களைத் தேடி உலகம் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், வெறும் 72 கி.மீ தூரத்தைச் சென்றடைய 3:15 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது இந்த ரயில்.

காரைக்குடி-திருத்துறைப்பூண்டி இடையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணி ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அதனால் இந்தப் பாதையில் ரயில்கள் இயக்கம், 2012 மார்ச் மாதத்துடன் நிறுத்தப்பட்டது. அகலப்பாதையாக மாற்றும் பணி மந்தமாக நடைபெற்றுவந்த நிலையில், காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே 72 கி.மீ தூரப் பணிகள் நிறைவுபெற்றன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது 110 கி.மீ வேகத்தில் பயணித்த ரயில், 52 நிமிடங்களில் பட்டுக்கோட்டையை அடைந்தது. காரைக்குடி வாசிகளுக்குப் பெரும் மகிழ்ச்சி. ஏனென்றால், காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு பஸ்ஸில் சென்றால், இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்