அனுமதி பெறாமல் சிலை! - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க?

‘ஜெயலலிதாவுக்கு கோவையில்தான் முதல் சிலை வைக்கப்பட்டது’ என்பது வரலாறு; அதன்பின் சென்னை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட ஜெ. சிலை, யாரைப் போல இருக்கிறது என்பது தீர்க்கப்படாத தகராறு. கோவையில் ஜெ. சிலை, எந்தவித அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டுள்ளது என்பது லேட்டஸ்ட் பகீர்.

2017 டிசம்பர் 3 அதிகாலை... கோவை  வ.உ.சி மைதானத்துக்கு  அருகில் இருந்த அண்ணா சிலைக்கு அருகே திடீரென எம்.ஜி.ஆர் சிலையும் ஜெயலலிதா சிலையும் முளைத்திருந்தது. ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அண்ணா சிலையை செப்பனிடுகிறோம்’ என்ற போர்வையில் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் சேர்த்து சிலை வைத்தனர் அ.தி.மு.க-வினர்.

எந்தத் தகவலும் இல்லாமல் திடீரென சிலைகள் வைக்கப்பட்டதால், பெரும் குழப்பம் ஏற்பட்டது. ‘யாரிடம் அனுமதி வாங்கி சிலைகளை வைத்தீர்கள்?’ என்று எதிர்க்கட்சிகள் கேட்டன. கோவை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர் என அதிகாரிகளை மீடியாக்கள் தொடர்புகொண்டன. யாரும் வாய் திறக்கவில்லை. ‘சிலையைத் திறக்க முதல்வர் வந்துதானே ஆகவேண்டும்’ என்று காத்திருந்த மீடியாக்களுக்குக் கடும் அதிர்ச்சி. கடைசிவரை முதல்வர் அந்த சிலைகளைத் திறக்க வரவே இல்லை. நூற்றாண்டு விழாத் திடலில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை திறந்துவைக்க வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியிடம், ‘‘விழா முடிந்ததும் கலைக்கப்படப்போகிற புகைப்படக் கண்காட்சியையெல்லாம் திறக்க வர்றீங்க... காலத்துக்கும் இருக்கப்போகிற சிலைகளைத் திறக்க யாரும் வரலையே?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, பதிலே சொல்லாமல் நழுவிவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick