“எங்க அப்பாவே குழந்தையா வரப்போறாரு!” - உயிரைப் பறித்த விபரீத பிரசவம்

“இயற்கை மருத்துவம், தற்சார்பு வாழ்க்கை முறை என பிரவீன் முழுக்கவே மாறிப்போய்விட்டார். எப்போதும் இயற்கை மருத்துவத்தைப் பற்றியே பேசுவார். இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு கொண்ட நண்பர்களின் வட்டாரத்திலேயே அதிகமான நேரத்தை அவர் செலவிட ஆரம்பித்தார். இப்போது, இயற்கைப் பிரசவம் என்று சொல்லி, வீட்டிலேயே மனைவிக்குப் பிரசவம் பார்க்கப்போய், அவரது வாழ்க்கையே சோகமாகிவிட்டது” என்று மிகுந்த கவலையுடன் கூறினர், கார்த்திகேயனுடன் பணியாற்றியவர்கள்.

திருப்பூரை அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இவரின் மனைவி கிருத்திகா, ஒரு தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை. அந்தக் குழந்தை, மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டுப் பிறந்தது. கிருத்திகா மீண்டும் கர்ப்பமானார். இயற்கை உணவு, இயற்கை விவசாயம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான கார்த்திகேயனுக்கு, தன் மனைவிக்கு வீட்டிலேயே வைத்து இயற்கையான முறையில் சுகப்பிரசவம் நடைபெறச் செய்ய வேண்டுமென்ற விருப்பம் ஏற்பட்டது. கணவர் விரும்பியதால், கிருத்திகாவும் அதற்கு சம்மதித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick