கலங்கிய ஸ்டாலின்... அழுத அழகிரி... தழுதழுத்த தயாளு!

ருணாநிதியின் வாழ்க்கை வரலாறு என்பது, பல போராட்டங்களின் தொகுப்புதான். இப்போதும் இயற்கையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி, அதிசயங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் அவர்.

ஜூலை 27, வெள்ளிக்கிழமை இரவு. கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. காவேரி மருத்துவமனையிலிருந்து மருத்துவக்குழு ஒன்று கருணாநிதியின் வீட்டுக்குவந்ததும் பரபரப்பு இன்னும் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து ‘கலைஞர் உடல்நிலை சீராக உள்ளது’ என அறிவித்த ஸ்டாலின், கோபாலபுரத்தில் குவிந்திருந்த தொண்டர்களைக் கலைந்து போகுமாறு அறிவித்தார். பிறகு ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட அனைவரும் கோபாலபுரத்திலிருந்து கிளம்பினர். வீ்ட்டில் கருணாநிதியின் மகள் செல்வி, உதவியாளர் நித்யா உள்ளிட்ட சிலர் மட்டுமே இருந்தனர். வழக்கமாக கருணாநிதிக்கு உதவியாக இருக்கும் செவிலியரும் இருந்துள்ளார்.

இரவு 11 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் மோசமானது. ரத்த அழுத்தம் மிக வேகமாகக் குறைய ஆரம்பித்து, காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதயத்துடிப்பும் வேகமாகக் குறைந்துள்ளது. இந்தத் தகவல் ஸ்டாலின் உள்ளிட்ட உறவுகளுக்கும், காவேரி மருத்துவமனைக்கும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக்குழு அவசரமாக வந்தது. குடும்ப மருத்துவர் கோபால் உள்ளிட்டோர் முதல் மாடியில் உள்ள அறைக்குச் சென்று, கருணாநிதியின் உடல்நிலையைச் சோதித்தனர். ‘அபாயக்கட்டத்தில் இருக்கிறார். இனி, வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்க முடியாது, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்’ என டாக்டர்கள் சொல்ல, ஸ்டாலின் கண்கலங்க ஆரம்பித்துவிட்டார். உடனே, காவேரி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

Editor’s Pick