“பன்னீரும் தம்பிதுரையும் எங்கே இருந்தார்கள்?

அப்போலோவில் ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் அழைக்கப்படுவார்களா என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை 50-க்கும் மேற்பட்ட நபர்களை விசாரித்துள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையை ஆய்வுசெய்யச் சென்றது ஆணையக் குழு. ஜூலை 29 மாலை அப்போலோ மருத்துவமனைக்குக் குழு சென்றது. ஆணையத்தின் செயலாளர் கோமளா, ஆணைய வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் ராஜா செந்தூர்பாண்டியன், அரவிந்தன், ஜெ.தீபா சார்பில் அவரின் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அப்போலோவில் ஒவ்வோர் இடத்தைப் பற்றியும் கோமளா கேட்கக் கேட்க, அப்போலோ மருத்துவமனையின் சி.இ.ஓ சுப்பையா விளக்கம் கொடுத்தார். முதலில், அப்போலோ இரண்டாவது தளத்தில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த MDCCU அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முதலில் ஓர் அறையைத் திறந்து, அதன் பிறகு மற்றொரு கதவைத் திறந்தால் மட்டுமே ஜெயலலிதா இருந்த இடத்தை அடையும் வகையில் அந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் ஜெயலலிதா முதலில் இருந்த 2008-ம் எண் கொண்ட அறை. இங்குதான் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இருந்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick