விசாரணை கமிஷன்கள் வேஸ்ட்! - ஜூ.வி சொன்னது... நீதிமன்றமும் குட்டியது - Follow up

‘‘விசாரணை ஆணையங்களால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இந்த ஆணையங்களை மக்கள் நம்பவில்லை. இவையெல்லாம் கண்துடைப்பு நாடகம்’’ எனக் கர்ஜித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த தி.மு.க ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு என்று சொல்லி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தார் ஜெயலலிதா. அதோடு புதிய தலைமைச் செயலகத்தை பல்நோக்கு அரசு மருத்துவமனையாகவும் மாற்றினார். விசாரணையைத் தொடங்கிய ரெகுபதி  கமிஷன், கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து அவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டனர். இந்த விசாரணை கமிஷனுக்கு  2015-ம் ஆண்டு தடைவிதித்தது நீதிமன்றம். நிலுவையில் இருந்த இந்த வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்த நிலையில், விசாரணை கமிஷன்கள்மீது கடும் அதிருப்தியைத் தெரிவித்தது நீதிமன்றம்.

‘‘தடை விதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும், அதை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? ரெகுபதி ஆணையத்தை அரசு கலைக்காமல் இருப்பது ஏன்? ஆணையத்துக்குத் தடை விதித்த பிறகும், அதற்கு அலுவலகம், ஊழியர்கள் எனப் பெரும் தொகையை அரசு ஏன் செலவு செய்கிறது? கட்டடம் கட்டியதில் முறைகேடு நடந்திருந்தால், ஊழல் வழக்குப்பதிவு செய்யவேண்டியதுதானே? அதைச் செய்யாமல், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் எதற்காக விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும்?’’ எனக் கேள்விகள் எழுப்பியது உயர் நீதிமன்றம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick