இந்த சாதனையை ஏன் கொண்டாடவில்லை? - மௌனம் சாதிக்கும் எடப்பாடி அரசு | First non-Brahmin appointed as priest in Tallakulam Ayyappan temple - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/08/2018)

இந்த சாதனையை ஏன் கொண்டாடவில்லை? - மௌனம் சாதிக்கும் எடப்பாடி அரசு

ந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில், தமிழகத்திலேயே முதன்முதலாகப் பிராமணர் அல்லாத அர்ச்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டது ஒரு புரட்சிகரமான விஷயமாக விவாதிக்கப்படுகிறது. தி.மு.க ஆட்சியில் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணையை, எடப்பாடி அரசு செயல்படுத்தியுள்ளதாகப் பாராட்டிப் பேசப்பட்டாலும், இதை ஏன் தமிழக அரசு பகிரங்கப்படுத்தவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணை தி.மு.க ஆட்சியில் 2006-ம் ஆண்டு போடப்பட்டது. அதன்படி சைவ, வைணவக் கோயில்களில் அர்ச்சகராகப் பணிபுரியும் வகையில், தமிழகத்தின் முக்கியக் கோயில்களில் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் பேட்ச்சில் 206 மாணவர்கள் அர்ச்சகர்களாகப் பயிற்சி முடித்து, மடாதிபதிகளிடம் தீட்சை பெற்றார்கள். அவர்களை அறநிலையத் துறை கோயில்களில் உள்ள காலியிடங்களில் நியமிக்க கருணாநிதி அரசு ஏற்பாடு செய்தது. அதை எதிர்த்து, பரம்பரை அர்ச்சகர் என்று சொல்லப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கினார்கள். பின்பு, இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க