மிஸ்டர் கழுகு: மருத்துவமனையில் மல்லுக்கட்டு!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை, தி.மு.க உடன்பிறப்புகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. இப்போதைக்கு அந்த மருத்துவமனைதான் அவர்களுக்கு அறிவாலயம், கோபாலபுரம் எல்லாம். 

மருத்துவமனையின் நான்காவது மாடியில் கருணாநிதி சிகிச்சைபெறும் அறை உள்ளது. அந்தத் தளத்தில் உள்ள அனைத்து அறைகளையும் கருணாநிதி குடும்பத்தினரும், கட்சியின் முக்கியப் பிரமுகர்களும் எடுத்துக்கொண்டுள்ளனர். ஸ்டாலின் குடும்பத்துக்கு ஓர் அறை, அழகிரி குடும்பத்துக்கு ஓர் அறை, ராஜாத்தி அம்மாள் மற்றும் கனிமொழிக்கு ஓர் அறை, செல்வி குடும்பத்துக்கு ஓர் அறை எனத் தனித்தனி அறைகளில் உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் ஓர் அறையில் உள்ளனர். கே.என்.நேருவுக்கு மருத்துவமனை சார்பில் தனி அறை கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை உரிமையாளர்களும் கே.என்.நேருவும் உறவினர்கள் என்பதால், அவருக்கு அந்தச் சிறப்பு.

நான்காவது தளத்தில் உள்ள தன் அறையில்தான், தலைவர்களையும், முக்கியப் பிரமுகர்களையும் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அழகிரியின் அறைப் பெரும்பாலான நேரங்களில் மூடியே இருப்பதால், ‘எதற்குப் பிரச்னை’ என்று பலர் அவரைச் சந்திக்காமல் நழுவிவிடுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick