புதுச்சேரி... அச்சத்தில் அனுமதிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள்! | Nominated BJP MLAs allowed in Puducherry Assembly - Junior Vikatan | ஜூனியர் விகடன்

புதுச்சேரி... அச்சத்தில் அனுமதிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள்!

‘மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேரையும் சட்டசபைக்குள் புதுச்சேரி அரசு அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து, சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய அந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், தங்கள் பலம் அதிகரித்திருப்பதாக உற்சாகத்தில் இருக்கிறது, பிரதான எதிர்க்கட்சியான     என்.ஆர்.காங்கிரஸ். ஆனால், ஆளும் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான தி.மு.க, இதனால் அதிருப்தியில் உள்ளது. 

‘பி.ஜே.பி நியமன எம்.எல்.ஏ-க்களை எக்காரணம் கொண்டும் சட்டசபைக்குள் அனுமதிப்பதில்லை’ என்பதில் உறுதியாக இருந்தது நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு. ஆனால், உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து, மூன்று எம்.எல்.ஏ-க்களும் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என்று அரசு கடிதம் அனுப்பியது. அவர்கள் முதல்முறையாகப் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick