ஜவ்வாது மலையின் முதல் பெண் டாக்டர்!

“நீட் தேர்வுல பாஸாக முடியாம சில பிள்ளைக இறந்துபோகுதுக... எம் பொண்ணு நீட் தேர்வுல பாஸானதும் சந்தோஷப்பட்டேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துல பல் டாக்டருக்குப் படிக்க இடம் கிடைச்சுது. ஆனா, எங்களால கட்ட முடியாத அளவுக்கு ஃபீஸ் சொன்னாங்க. எம் புள்ள மனமுடைஞ்சு போயிருமோன்ற பயத்துல ராவெல்லாம் தூங்கலை. எம் புள்ளைய பாத்துக் கிட்டே இருந்தேன்” என்று சொல்லும்போதே சரோஜாவின் கண்களில் கண்ணீர் ததும்புகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் இருக்கிறது பட்டன்கோவிலூர். போய்ச்சேருவதற்கு ஒழுங்கான பாதைகூட இல்லாத இந்தக் குக்கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவரின் மகள் சுமித்ரா. நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றதால், இவருக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. தன் கனவு நனவாகப்போகிறது என்ற ஆசையுடன் சென்ற சுமித்ராவுக்குப் பெரும் அதிர்ச்சி. ஓர் ஆண்டுக்கு ஆறு லட்ச ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளனர். அவ்வளவு பணத்துக்கு எங்கே போவார் அந்தப் பழங்குடி தந்தை? தந்தையும் மகளும் சோகத்துடன் ஊர் திரும்பினர். இதைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, இந்த மாணவியின் மருத்துவப் படிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick