தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை!

ஸ்டெர்லைட் சி.இ.ஒ பேட்டி

ஸ்டெர்லைட் மூடப்பட்டிருக்கிறது. ஆனால், ‘‘தமிழகத்தை விட்டு வெளியேறும் எண்ணம் நிச்சயம் எங்களுக்கு இல்லை’’ என அறிவித்திருக்கிறது இந்த ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம். அடுத்து, ஸ்டெர்லைட்டின் நகர்வு என்னவாக இருக்கும்? மீண்டும் திறக்கப்படும் வாய்ப்புள்ளதா? மே 22 துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி ஸ்டெர்லைட் என்ன நினைக்கிறது? மௌனமாகவே இருந்த ஸ்டெர்லைட் நிர்வாகம் சமீபகாலமாக பேசத் தொடங்கியுள்ளது. ஸ்டெர்லைட்டின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத்தை சந்தித்தோம்.

‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி ஸ்டெர்லைட் சொல்ல விரும்புவது என்ன?’’

‘‘அது வருந்தத்தக்க ஒரு நிகழ்வு. அப்படி ஒரு சம்பவமே நடந்திருக்கக் கூடாது என நினைக்கிறோம். அதற்கும் ஸ்டெர்லைட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறோம்.’’

‘‘ஸ்டெர்லைட் கேன்சர் பற்றி...’’

‘‘தூத்துக்குடி ஒரு தொழில் நகரம். அங்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமா உள்ளது? பிறகெப்படி யாருக்கு கேன்சர் வந்தாலும் அதை ஸ்டெர்லைட் கேன்சர் என்கிறார்கள்? இது திட்டமிட்டுப் பரப்பப்பட்ட பொய். அதனால்தான், இந்தப் போராட்டத்தையே ‘சமூக வலைதளங்களால் உருவாக்கப்பட்ட போராட்டம்’ என்கிறோம். அங்கு கேன்சரில் யார் இறந்தாலும், ஸ்டெர்லைட்தான் காரணம் என்று சொல்லச் சொல்கிறார்கள். அப்படிச் சொன்னால் பணம் தருகிறார்கள். சமீபத்திய போராட்டத்தின்போதும்கூட, ஒரு பெண்மணி கேன்சரால் இறந்தார். அவர் கணவருக்கு ஒரு லட்சம் ரூபாய் தந்துள்ளனர், ஸ்டெர்லைட்தான் காரணம் என்று சொல்வதற்காக!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick