“எனக்கு நீ வேண்டும்!” - விபரீத மொபைல் ட்ராக் ஆப் | MBA graduate arrested for blackmailing woman - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/08/2018)

“எனக்கு நீ வேண்டும்!” - விபரீத மொபைல் ட்ராக் ஆப்

மொபைல் ட்ராக் ஆப் மூலம் ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர் பிடிபட்டுள்ளார். சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரம் ஒன்றைச் சேர்ந்தவர் அல்ல அவர். ராமநாதபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதுதான், இதில் அதிர்ச்சிக்குரிய விஷயம்.

நடந்தது இதுதான்... ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள தாமரை ஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தார். அங்கிருந்து தன் மனைவிக்குப் புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கி அனுப்பியுள்ளார் அவர். போனை எப்படி உபயோகிப்பது என்று தன் வீட்டருகே வசிக்கும் தம்பி உறவுமுறை கொண்ட தினேஷ்குமார் என்பவரிடம் கமலா கேட்டுள்ளார். வாட்ஸ்அப் உள்ளிட்ட ஆப்களை பதிவிறக்கம் செய்துகொடுத்தவர், அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்றும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.