இயற்கை மருத்துவம் Vs அலோபதி மருத்துவம்... - பிரச்னை ஆன பிரசவம்!

ருந்துகள் இல்லாமல், மருத்துவமனை வாடையே இல்லாமல், தன் மனைவிக்கு வீட்டிலேயே சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்ற ‘இயற்கை’ எண்ணம் திருப்பூரைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கு ஏற்பட்டதால், பரிதாபமாக இறந்துபோனார் அவரின் மனைவி கிருத்திகா. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கார்த்திகேயனைக் கைது செய்தது மட்டுமல்லாமல், இனிமேல் யாரும் இப்படியான விபரீத முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது என எச்சரித்தது தமிழக அரசு.

அடுத்த சில நாள்களிலேயே, கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளியான ஒரு விளம்பரம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. ‘வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு எளிய வழிகாட்டும் ஒருநாள் இலவசப் பயிற்சி முகாம்’ என்று அந்த விளம்பரம் அறிவிக்க... இந்திய மருத்துவ சங்கத்தின் நிர்வாகிகள் பொங்கியெழுந்துவிட்டனர். ‘இந்த நிகழ்ச்சியைத் தடுக்க வேண்டும்’ என்று அவர்கள் கோவை கலெக்டரிடம் புகார் கொடுத்தனர். திருப்பூரில் நடந்த கிருத்திகா மரணத்திற்கும், அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியே காரணம்  என்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கமும் போர்க்கொடி தூக்கியது. அதையடுத்து, கோவையில் நிகழ்ச்சி நடத்த இருந்த ‘நிஷ்டை’ அமைப்பைச் சேர்ந்த ஹீலர் பாஸ்கரைக் கைது செய்தது போலீஸ். ஹீலர் பாஸ்கரின் ஆதரவாளர்கள் இதைக் கண்டித்துச் சமூக வலைதளங்களில் எழுதிக் குவிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்