மிஸ்டர் கழுகு - கவலை... கண்ணீர்! | Mr Kazhugu: Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/08/2018)

மிஸ்டர் கழுகு - கவலை... கண்ணீர்!

கஸ்ட் 6-ம் தேதி திங்கள்கிழமை இரவு... கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக, காவேரி மருத்துவமனை ஆறாவது மருத்துவ அறிக்கை வெளியிட்டது. ‘உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருடைய வயது மூப்பினைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அவரது உடலின் முக்கிய உறுப்புகளைச் செயல்பட வைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டுவருகிறது. தொடர்ச்சியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன’ என்ற அந்த அறிக்கையைப் படித்துக்கொண்டிருந்தபோது கழுகாரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ‘‘காவேரி மருத்துவமனையில் இருக்கிறேன்’’ என்றார். பின்னணியில் கண்ணீரும் கவலையுமாக உணர்ச்சிமயமான குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன.