எடப்பாடி கையில் பன்னீரின் லகான்! | OPS politics is under the control of EPS - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/08/2018)

எடப்பாடி கையில் பன்னீரின் லகான்!

‘ஆண்டு ஒன்று முடிந்தது... ஆனால், ஒரு வழியும் பிறக்கவில்லை’ என்ற புலம்பல் அ.தி.மு.க-வில் உள்ள பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு நடைபெற்றது. ‘தினகரன் குடும்பத்தைக் கட்சியிலும் ஆட்சியிலும் தலையீடு செய்யவிடாமல் ஒதுக்கிவைக்க வேண்டும்... ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்பவை உள்ளிட்ட சில நிபந்தனைகளை வெளிப்படையாக விதித்தாலும், பதவி பேரங்கள்தான் திரைமறைவில் நடைபெற்றன. அதில் பல விஷயங்களை எடப்பாடி தரப்பு ஒப்புக்கொண்டதால்தான், இணைப்பு சாத்தியமானது. ஆனால், ‘‘எடப்பாடியின் கைப்பிடிக்குள் பன்னீர் சிக்கிவிட்டதால், எங்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிட்டது’’ என்று புலம்புகிறார்கள் பன்னீர் ஆதரவாளர்கள்.