கம்பேரிஸன் கோவாலு! | Transparency of Tamilnadu Government - Funny - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/08/2018)

கம்பேரிஸன் கோவாலு!

‘என்ன பிரச்னையாக இருந்தாலும் சரி, அதில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது’ என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி கொடுத்திருக்கிறார். யோசித்துப் பார்த்தால், இந்த அரசு நிறைய விஷயங்களில் கண்ணாடிபோல பளபள வெளிப்படைத்தன்மையுடன்தான் இருந்திருக்கிறது.

*
‘என்னாது... எதிர் டீமுக்குப் போவியா... விட்டாத்தானே!’ என மொத்தமாக பஸ்ஸில் அடைத்து இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துப்போன தில்லெல்லாம் இந்த அரசுக்கு மட்டுமே உண்டு. ‘நாங்க அப்படித்தான் கூப்பிட்டுப்போவோம், என்னா பண்ணுவீங்க?’ என வெளிப்படையாக டிக்ளேர் செய்ததுதான் பின்னாளில் கர்நாடகாவில் ரோல் மாடலாகப் பார்க்கப்பட்டது.