கூட்டணி மாறுதோ! - அ.தி.மு.க.வைத் திணறடிக்கும் தினகரன் திட்டம் | AMMK ready to be with Congress, if it exits DMK alliance - Says Dhinakaran - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/08/2018)

கூட்டணி மாறுதோ! - அ.தி.மு.க.வைத் திணறடிக்கும் தினகரன் திட்டம்

“தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகி எங்களை அணுகினால் கூட்டணி வைக்கத் தயார்” என்று பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்த பிறகு அதிரடியாக தினகரன் அறிவித்தது, தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

‘‘இது திடீர் அறிவிப்பு அல்ல... திட்டமிட்ட அறிவிப்பு’’ என்கிறார்கள் தினகரன் தரப்பினர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆரம்பித்துவிட்டார்  தினகரன். மண்டல நிர்வாகி களையும், புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களையும் தினகரன் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள், மண்டல நிர்வாகிகள், தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோரை அழைத்து ஆகஸ்ட் 9-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணி குறித்த திடீர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதன் பின்னணி என்ன? தினகரன் வட்டாரத்தில் பேசினோம்.

[X] Close

[X] Close