வைகை அணையை ஆக்கிரமிக்கும் அமெரிக்க மீன்! - தென் தமிழகத்துக்கு ஆபத்து | American fish that invades Vaigai dam - danger to Southern Tamil Nadu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/08/2018)

வைகை அணையை ஆக்கிரமிக்கும் அமெரிக்க மீன்! - தென் தமிழகத்துக்கு ஆபத்து

‘வைகை அணை மீனுன்னா அவ்வளவு ருசி...’ என்று சிலாகித்துப் பேசிய தேனி மாவட்ட மக்கள் இப்போது, வைகை மீன் என்றால், “அய்யய்யோ...’’ என்று அலறுகிறார்கள். ஏன்?

‘‘அரசு அனுமதியுடன் 70 பரிசல்களில் 150-க்கும் மேற்பட்டோர் அணையில் மீன் பிடிக்கிறோம். தினமும் காலையில் தேனி சுற்றுவட்டார மக்களும், மீன் வியாபாரிகளும் அணைக்கு வந்து மீன் வாங்கிச்செல்வார்கள். கடந்த ஆறு மாதங்களாக, அணையில் எங்கு வலை வீசினாலும் அழுக்கு மீன்கள்தான் சிக்குகின்றன. இவற்றுக்கு, ‘கரட்டான் மீன்கள்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். கண்ணாடித் தொட்டியில் உள்ள அழுக்கைச் சாப்பிட்டு வளரும் இந்த மீன்கள், வைகை அணைக்கு எப்படி வந்தன என்று தெரியவில்லை; ஆறு மாதங்களில் அணையை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டன. பார்க்க அருவருப்பாக இருப்பதால், இந்த மீன்களை யாரும் வாங்குவதில்லை. இதனால், எங்கள் பிழைப்பே கெட்டுவிட்டது. இப்படியே போனால், அடுத்த ஆறு மாதங்களில் வைகை அணையில் இந்த மீன்கள் மட்டும்தான் இருக்கும்’’ என்று வேதனைப்படுகிறார்கள் வைகை அணையில் மீன் பிடிப்பவர்கள்.

[X] Close

[X] Close