உலகெலாம் சூரியன் | Manushyaputhiran poetry about Karunanidhi - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/08/2018)

உலகெலாம் சூரியன்

மனுஷ்ய புத்திரன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

சூரியகுமாரா...
இருண்ட நிலங்களிலிருந்து
காலத்தின் நீண்ட இரவுகளிலிருந்து
வாராது வந்த உதயமாய் வந்தாய்
வெளிச்சமற்ற தலைமுறைகளின்
வரலாற்றுத் துயரங்களின்மீது
ஒரு மகத்தான விடியலாய் வந்தாய்