கும்பல் கொலை தடுப்புச்சட்டம் வருமா?

வதந்திகளால் நிகழும் படுகொலைகள்...

னைவர் கைக்கும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. இந்தத் தகவல்தொடர்பு வளர்ச்சியில், மனித நாகரிகம் முன்னோக்கி நகர வேண்டும் என்பது இயல்பு. ஆனால், அந்த ஸ்மார்ட் போனையே பயன்படுத்தி, காட்டுமிராண்டி காலத்தை நோக்கிப் போகிறார்கள் சிலர். சமீபகாலத்தில் மிகவும் பிரபலமாகியிருக்கிற, ஊடகங்களில் தினமும் உச்சரிக்கப்படுகிற லின்ச்சிங் (Lynching) சொல்லே இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

சக மனிதனைக் கும்பலாகச் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்யும் ‘லின்ச்சிங்’ என்ற காட்டுமிராண்டித்தனம், அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக இந்தியாவில் மாறியிருக்கிறது. ஒரே மாதத்தில் 28 பேர் கும்பல் கொலை செய்யப்பட்டுள்ளனர். 71 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதற்குமுன் எப்போதும் இப்படி நடைபெற்றதில்லை.

2015 செப்டம்பர் மாதத்தில் ஓர் இரவு, உ.பி மாநிலம் தாத்ரியில் முகமது அக்லக் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து ஒரு கும்பல் அவரை அடித்துக் கொன்றது. அவர் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்பதுதான் அந்தக் கும்பல் சொன்ன காரணம். ஆனால், அது மாட்டிறைச்சி அல்ல, ஆட்டிறைச்சி என்று அதை ஆய்வுசெய்த நிபுணர் குழு பின்னர் அறிக்கை அளித்தது என்பதுத் தனிக்கதை. குஜராத் மாநிலம் உனாவில், செத்துப்போன பசுவின் தோலை உரித்ததற்காக, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேரை, கொலைவெறியுடன் தாக்கியது காட்டுமிராண்டி கும்பல் ஒன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick