தானம் பெற்ற ரத்தத்தை கழிவறையில் கொட்டினார்கள்?

மதுரை மருத்துவமனையில் நடந்தது என்ன?

த்தத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால், ரத்த தானம் குறைவாகவே செய்யப்படுகிறது. இதனால் பல அரசு மருத்துவமனைகளின் ரத்த வங்கிகள் காய்ந்து கிடக்கின்றன. இந்தச் சூழலில், நோயாளிகளின் உயிரைக் காப்பதற்காகக் கொடையாளர்களிடம் தானமாகப் பெறப்பட்ட ரத்தம், மதுரை அரசு  ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கழிவறையில் கொட்டி வீணடிக்கப்படுவதாக பகீர் புகார் கிளம்பியிருக்கிறது. இதுதொடர்பாக வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

ரத்த தான முகாம் நடத்தப்பட்டு, கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினராலும் தன்னார்வத்துடன் வழங்கப்படும் ரத்தம், அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை, மகப்பேறு காலம், விபத்து போன்ற அவசரத் தேவைகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick