“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது!” - திருமுருகன் காந்தி கைது பின்னணி

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை போலீஸார் கைது செய்ததையும், அவர் கைதுசெய்யப்பட்ட விதத்தையும் தி.மு.க உட்படப் பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாள ரான திருமுருகன் காந்தி, ஜெர்மனியிலிருந்து ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமானநிலையத்தில் வந்திறங்கினார். பெங்களூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடக்கவிருந்த கருத்தரங்கை முடித்துவிட்டு, தமிழகம் வர அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், விமானத்தில் வந்திறங்கிய திருமுருகன் காந்தியை, குடிவரவுத் துறை அதிகாரிகள் தனியாக அழைத்துச்சென்றனர். ‘உங்களைத் தடுத்துவைக்குமாறு தமிழக போலீஸ் கேட்டுக்கொண்டதால், இந்தியா முழுவதும் உள்ள விமானநிலையங்களுக்கு லுக் அவுட் சர்க்குலர் தரப்பட்டுள்ளது. அதன்படி, உங்களைத் தடுத்துவைக்கிறோம்’ என்று கூறி, விமானநிலைய போலீஸாரிடம் திருமுருகன் காந்தியை ஒப்படைத்தனர். காலை உணவு முடியும் வரை இயல்பாகவே இருக்க திருமுருகன் காந்தி அனுமதிக்கப்பட்டிருந்தார். கர்நாடகத்தில் உள்ள மே பதினேழு இயக்கத்தினர் மற்றும் பிற தமிழர் அமைப்பினர் அவரைச் சந்திக்க முடிந்தது. காலை 10 மணிக்கு மேல் திருமுருகன் காந்தியைப் பார்க்கவோ, அவருடன் பேசவோ யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. கர்நாடக போலீஸார் அதிக எண்ணிக்கையில் அந்த போலீஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். வழக்கு விவரம் எதையும் கூறாமல், திருமுருகன் காந்தியைக் கைதுசெய்வதற்கு சென்னையிலிருந்து சைபர் க்ரைம் போலீஸ் டீம் வருவதாக மட்டும் திருமுருகன் தரப்பிடம் தெரிவிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick