சிக்கிய மீன்கள்... சிக்காத திமிங்கிலங்கள்! - மறுமதிப்பீடு மங்காத்தா

ண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள்தான் தாமதமாக வெளியாகும்;ஆனால் முறைகேடுகளோ, வேக வேகமாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. இதில் முக்கியப் புள்ளிகளின் தொடர்புகள் வெளிவந்துகொண்டிருப்பதால், அடுத்து என்ன செய்வது என்று வழி தெரியாமல் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது.

பல்கலைக்கழகத் தேர்வுகளில் நடைபெற்ற மறு மதிப்பீடு முறைகேட்டில், முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா உட்பட 10 பேர்மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீஸார் ஜூலை 31-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இதைக் கண்டித்த பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும், ‘‘இவர்கள் எல்லோரும் சிறிய மீன்கள். திமிங்கிலங்கள் வெளியே சுற்றிக்கொண்டிருக்கின்றன’’ என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், ஆகஸ்ட் 10-ம் தேதி நடத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில், ‘‘விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டுக்கு மூலகாரணமே, பதிவாளர் கணேசன்தான். அவரை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. அதை கவர்னர் பன்வாரிலால் புரோஹித், துணைவேந்தர் சூரப்பா, உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் ஆகியோருக்கு அனுப்பிவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick