தங்கக் கடத்தல் மையமாகும் திருச்சி! - சிக்கும் அதிகாரிகள்... சிக்காத ஏஜென்ட்கள்

ர்வதேச தங்கக் கடத்தல் வரைபடத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள திருச்சி விமானம் நிலையம் வழியாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தி வரப்படுவது தொடர்கதையாக இருந்துவருகிறது.

மலேசியாவிலிருந்து, ஜூலை 31-ம் தேதி திருச்சி வந்த ‘மலிண்டோ ஏர்’ விமானத்தில், ரூ.2.5 கோடி மதிப்பிலான 46 தங்கக் கட்டிகள் மற்றும் ரூ.11 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் சிக்கின. இது தொடர்பாக, விமான நிலைய தனியார் ஒப்பந்த ஊழியர்களான முகம்மது ஷெரிஃப், பிரதீப் செளரிராஜ், மகிமை பிரபு உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், “திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தங்கக் கடத்தல் ஏஜென்ட்கள் உள்ளனர். வறுமையில் வாடும் கிராமத்துப் பெண்களும் வேலையில்லா இளைஞர்களும், வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்துவதற்கு ‘குருவி’களாகப் பயன்படுத்தப் படுகின்றனர்” என்பது தெரியவந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்