காவு வாங்கும் கப்பல்கள்! - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்

ழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு கொடுங்காற்று போன்ற இயற்கைச் சீற்றங்களால் மட்டுமே இதுவரை ஆபத்து ஏற்பட்டுவந்தது. இப்போது மீனவர்களுக்கு எமனாகக் கடலில் உலவிக்கொண்டிருக்கின்றன கப்பல்கள். கப்பல்களுக்கு பயந்து ஆழ்கடல் மீன்பிடித்தொழிலைக் கைவிடும் நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் முனம்பம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆகஸ்ட் 6-ம் தேதி ஓசியானிக் என்ற விசைப்படகில் 14 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களில் 11 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 7-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு இந்த விசைப்படகுமீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பேர் இறந்துவிட்டனர். சுக்குநூறாக உடைந்துபோன விசைப்படகுடன் ஒன்பது பேர் கடலில் மூழ்கிக் காணாமல்போய்விட்டனர். இவர்களில் முள்ளூர்துறையைச் சேர்ந்த சகாயராஜ், ராமன்துறையைச் சேர்ந்த ஜேக்கப், யுகநாதன் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு சொந்த ஊரில் அடக்கம்செய்யப்பட்டன. ராமன்துறையைச் சேர்ந்த ஜேசுபாலன், ராஜேஷ்குமார், ஆரோக்கிய தினேஷ் மற்றும் ஷாலு, முள்ளூர்துறையைச் சேர்ந்த இன்னொரு சகாயராஜ், மணக்குடியைச் சேர்ந்த வர்ஷன், மரியராஜன் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த சிஜு, மேற்குவங்கத்தைச் சேர்ந்த தீபுல் ஆகியோர் படகுடன் சேர்ந்து மூழ்கிவிட்டனர். இரண்டு பேர் மட்டுமே காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick