“தகவல் ஆணையம் பல் இல்லாத பாம்பாகிவிடும்!”

எச்சரிக்கும் ஆர்.டி.ஐ ஆர்வலர்கள்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிகள் எடுத்துவருகிறது. இதைத் தொடர்ந்து, ‘‘அந்தச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காகவே இந்தத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது’’ எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு, 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு முறைகேடுகளைச் சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் பல ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ளனர். ஊழல் பேர்வழிகள் அம்பலப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாமல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திய சமூக ஆர்வலர்கள் பல இடங்களில் படுகொலை செய்யப்பட்டதும் நடந்தது. ‘இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து சட்டப் பாதுகாப்பு வழங்கவேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்தபோது, மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, இந்தச் சட்டத்தையே ஒன்றுமில்லாமல் செய்யும் முயற்சியில் இப்போது இறங்கியுள்ளது.

கனடாவில் வாழும் இந்தியரான ரோஷன் ஷா, 2013-ம் ஆண்டில் நரேந்திர மோடியின் கல்வித்தகுதியை அறிந்துகொள்ள வேண்டும் என குஜராத் பல்கலைக்கழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு செய்தார். ஆனால், அவருக்குப் பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையே மோடி பிரதமரானதும், பிரதமர் அலுவலகத்துக்கே கடிதம் எழுதினார் ரோஷன் ஷா. ‘எங்களிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை’ எனப் பதில் அனுப்பியது பிரதமர் அலுவலகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick