பயிர்களை அழிக்கும் படைப்புழு!

தமிழக விவசாயிகளை மிரட்டும் அமெரிக்க வில்லன்

னிதர்களுக்கும் பூச்சிகளுக்கும் நடக்கும் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தப் போராட்டத்தில், ஒவ்வொருமுறையும் பூச்சிகளே வெற்றிக்கோப்பையைக் கொண்டு செல்கின்றன. நம்மால் இத்தனை ஆண்டுகளில் கொசுவைக்கூட அழிக்க முடியவில்லை. நாம் எந்த ஆயுதங்களைப் பயன்படுத்தினாலும், அவற்றைப் பயன்படுத்தி அவை பல்குத்திக் கொள்கின்றன. எதிர்ப்புச் சக்தியைப் பல மடங்கு அதிகரித்துக்கொள்கின்றன. இவற்றை அழிக்கிறோம் என்ற பெயரில், பயிர்களில் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து நம்மையே அழித்துக்கொள்கிறோம்.

ஏற்கெனவே இருக்கும் பூச்சியப்பன்கள் தொல்லை தாங்க முடியாத நிலையில், தற்போது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒரு சின்னஞ்சிறிய புழு, உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. ‘‘என்னை ஜெயிச்சு பாருங்க பாஸ்’’ எனச் சர்வதேச விஞ்ஞானிகளுக்கு இது சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் புழு, மக்காச்சோளப் பயிரை அதிகளவு தாக்குகிறது. ‘படைப்புழு’ எனப்பெயரிடப்பட்டுள்ள இது, அமெரிக்காவில்தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. குறுகிய காலத்தில் ஆப்பிரிக்க கண்டத்திலும் பரவியது. ‘‘இது, விரைவில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பஞ்சத்தை ஏற்படுத்தும்’’ என்கிறார்கள். தொடர்ந்து ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் வந்துகொண்டிருக்கிறது இந்தப் புழு. இந்தப் புழுவை அழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச விஞ்ஞானிகளை அழைத்து அடிக்கடி விவாதிக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick