இனி பஸ் ஸ்டாண்டிலும் பிளாட்பாரம் டிக்கெட்!

தனியார் கைக்குப் போகும் பஸ் நிலையங்கள்!

கோவை மாநகராட்சியில் தண்ணீர் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, பல ஊர்களில் பஸ் ஸ்டாண்டுகளையும் தனியாரிடம் ஒப்படைக்கப் போகிறார்கள். இனி, பஸ் ஸ்டாண்டுக்குள் கால் வைக்க வேண்டுமென்றால், நீங்கள் பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை வரலாம்.

ஆம். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருத்தணி, திண்டிவனம், மயிலாடுதுறை, நாமக்கல், தர்மபுரி ஆகிய நகரங்களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகள் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குப் போகின்றன. புதிய பஸ் ஸ்டாண்டை வடிவமைத்து, தங்கள் சொந்த நிதியில் கட்டி, 15 முதல் 20 ஆண்டுகள் வரை தங்கள் பொறுப்பில் வைத்துப் பராமரிக்கும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருத்தணி போன்ற ஆன்மிகச் சுற்றுலா நகரங்களுக்குத் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். அதனால், அங்கு பஸ் ஸ்டாண்டு கட்டி நிர்வகிக்கும் பொறுப்பைத் தனியாருக்கு விடுவதன் மூலம், அவர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள். இதற்கான அரசு உத்தரவு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ‘உள்ளாட்சி அமைப்புகள் நிதிச்சுமையில் தவிப்பதால் இந்த முடிவு’ என நியாயப்படுத்துகிறது தமிழக அரசு. இதற்கான டெண்டர் விடும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இனி, ‘இது பொது இடம்’ என்ற நினைப்புடன் பஸ் ஸ்டாண்டில் எவரும் காலடி எடுத்து வைக்க முடியாது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொதுப்போக்குவரத்தில் முக்கியமான இடத்தை வகிக்கும் பஸ் ஸ்டாண்டுகளைத் தனியாருக்குக் கொடுத்துவிட்டால், என்ன விளைவுகள் ஏற்படும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick