மிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்!” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம் | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்!” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்

மெரீனா கடற்கரையில் இரண்டாவது தர்ம யுத்தம் தொடங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. நான் அதைக் கவனித்துவிட்டு வருகிறேன்’ என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். டி.வி-யை ஆன் செய்தால், கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த குடும்பத்துடன் அழகிரி வந்த காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. பிரஸ்மீட்டுக்காக குவிந்திருந்த மைக்குகளில் கலைஞர் டி.வி மைக்கைப் பார்த்து, ‘‘நான் சொல்றதை இதுல போடமாட்டாங்களேய்யா’’ என்றவர், அடுத்து சன் டி.வி மைக்கை சுட்டிக் காட்டி, ‘‘இதுலயும்தான்’’ என்றார். அடுத்து அவர் சொன்ன வார்த்தைகள் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.

கழுகார் வந்ததும், ‘‘நீர் சொன்ன தர்மயுத்தம் இதுதானே! கொஞ்சம் விரிவாகச் சொல்லும்... அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பமாகக் காரணம் என்ன?’’

‘‘காவேரி மருத்துவமனையில் தி.மு.க தலைவர் கருணாநிதி இருந்த கடைசி நான்கு நாள்களும் தூக்கம் வராமல் தவித்துள்ளார் அழகிரி. அப்போது சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் தங்கியிருந்த அழகிரி, அழுவதும், அப்பாவை நினைத்து உருகுவதுமாக இருந்துள்ளார். தன் வாட்ஸ்அப் புரொஃபைல் போட்டோவாக இருந்த தனது படத்தை நீக்கிவிட்டு, கருணாநிதியின் இளவயதுப் படத்தை வைத்திருந்தார். தந்தையின் உடல்நிலை பற்றிய கவலை, கடும் அலைச்சல் காரணமாக ஏற்பட்ட முதுகுவலி என அமைதியற்ற மனநிலையில் இருந்தார் அழகிரி. அப்போது, தி.மு.க அதிருப்தி கோஷ்டியினர் சிலர் அவரைச் சந்தித்தனர். ‘நீங்கதான் கட்சியைக் காப்பாற்றவேண்டும். கார்ப்பரேட் கம்பெனி ஸ்டைலில் கட்சியை மாற்ற நினைக்கும் கோஷ்டியிட மிருந்து மீட்க வேண்டும்’ என்று சொன்னார்களாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick