புரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்! | Tamilians affected in Kerala flood - Junior Vikatan | ஜூனியர் விகடன்

புரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்!

கேரளாவின் இயற்கை அழகையும், அந்த மாநில மக்களின் இயல்பு வாழ்க்கையையும் புரட்டிப்போட்டிருக்கிறது இயற்கைச் சீற்றம். கடவுளின் தேசத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே வெள்ளக்காடு. சரிந்துகிடக்கும் மலைகளையும், நொறுங்கிப்போயிருக்கும் குடியிருப்புகளையும் காணும்போது, நெஞ்சம் பதறுகிறது. மழையால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இருநூறை நெருங்குகிறது என்பது இந்திய தேசத்துக்கே பெரும் சோகம்.

ஆகஸ்ட் 8-ம் தேதி ஆரம்பித்த மழை, விடாமல் பல நாள்கள் பெய்ததால், மத்திய - வட கேரளப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி மூச்சுத்திணறுகின்றன. அணைகள் அனைத்தும் நிரம்பியதால், 22 அணைகள் திறக்கப்பட்டன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

26 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுக் கொள்ளளவை எட்டிய இடுக்கி அணை திறக்கப்பட்டது. அதனால், செருதோணி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது. சிறிய நகரமான செருதோணி பெரும் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மிகப்பெரிய ஆறு என வர்ணிக்கப்படும் பெரியாறில் வெள்ளம் ஏற்படவே, ஆலுவா மற்றும் கொச்சி நகரங்கள் மூழ்கின. ஒரே நாளில் ஆயிரக் கணக்கான மக்களைத் தண்ணீர் சூழ்ந்துகொள்ள  சிலர் உயிரிழந்தனர். மலை மாவட்டங்களான வயநாடு மற்றும் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்படவே, பலி எண்ணிக்கை உயர ஆரம்பித்தது. பலர் காணாமல் போயினர். இடுக்கி, வயநாடு உட்பட எட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு, மீட்புப் பணியை முடுக்கிவிட்டது கேரள அரசு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick