இல்லாத தந்தி சேவைக்கு ரூ. 1,74,142 செலவு! | Scam in Madurai Corporation - Junior Vikatan | ஜூனியர் விகடன்

இல்லாத தந்தி சேவைக்கு ரூ. 1,74,142 செலவு!

முறைகேட்டில் முதலிடம் பிடிக்கும் மதுரை மாநகராட்சி

ந்தியாவில் தந்தி சேவை 2013-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், அதன்பிறகும் தந்தி அனுப்புவதற்காக 1,74,142 ரூபாயை மதுரை மாநகராட்சி செலவு செய்துள்ளது. இந்தத் தகவலைப் பார்த்து மதுரை மக்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருக்கிறார்கள். இப்படி கடந்த மூன்று நிதியாண்டுகளுக்கான செலவினங்களில் குண்டக்க மண்டக்க கணக்கு எழுதியுள்ளார்கள். ‘‘நானாத்தான் உளறிட்டேனா...’’ என்று வடிவேலு கேட்பதுபோல, தங்கள் கோல்மால் கணக்கைத் தாங்களே வெளியிட்டுச் சிக்கியிருக்கிறார்கள். 

தமிழகத்திலேயே முன்மாதிரியாக, செலவினங்களை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் செலவு விவரங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது மதுரை மாநகராட்சி. ‘‘அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு செலவினமும் அதிகப்படியாக உள்ளது. அவை, நம்பும்படியாகவும் இல்லை. மாநகராட்சியின் செலவினங்களை மறு தணிக்கை செய்ய வேண்டும்’’ என்று புகார் எழுப்பியிருக்கிறார்கள் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள். இதுதொடர்பாக மக்கள் விழிப்புஉணர்வு அறக்கட்டளை அளித்த புகாரை வாங்கிக்கொண்ட மதுரை கலெக்டர் வீரராகவ ராவ், ‘‘உடனே நடவடிக்கை எடுக்கிறேன். இதில் இன்னும் எப்படியெல்லாம் முறைகேடு நடந்துள்ளது என்பதை ஆய்வுசெய்து அறிக்கையாகத் தாருங்கள்’’ என்று கேட்டிருப்பது மாநகராட்சி நிர்வாகத்தைக் கூடுதலாக அதிர வைத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick