“ரஜினி மக்கள் மன்றத்தில் நடப்பது ரஜினிக்குத் தெரியுமா? - புலம்பும் ரசிகர்கள் | Rajini Makkal Mandram activities - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“ரஜினி மக்கள் மன்றத்தில் நடப்பது ரஜினிக்குத் தெரியுமா? - புலம்பும் ரசிகர்கள்

ரசியலுக்கு வருவேன் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ரஜினி அறிவித்தார். அதைத் தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றங்கள், ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றப்பட்டன. தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக ரஜினி மக்கள் மன்றத் தலைமையின் உத்தரவுப்படி, பூத் கமிட்டிகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனமும் நடைபெற்றது. சில மாதங்களிலேயே பல இடங்களிலும் நிர்வாகிகள் மாற்றப்பட்டார்கள்.

இதைத் தொடர்ந்து, ‘‘ரஜினி மக்கள் மன்றத்தில் நடப்பது ரஜினிக்குத் தெரியுமா என்பதே புரியவில்லை. 35 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ரசிகர் மன்றத்துக்கு உழைத்த உண்மை விசுவாசிகள் பலரும் திடீரென ஓரங்கட்டப்படுகிறார்கள். தலைமை நிர்வாகிகள் என்கிற பெயரில் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கிறார்கள்’’  என்று பொங்கிப் புலம்ப ஆரம்பித்துள்ளனர் மாவட்ட நிர்வாகிகள் சிலர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick