நீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்! | People affected in Kerala flood - Junior Vikatan | ஜூனியர் விகடன்

நீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்!

ளரியும் கதகளியுமாக மகிழ்ச்சியுடன் ஓணம் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்க வேண்டிய கேரள மக்கள், நிலச்சரிவின் இடிபாடுகளிலும் வெள்ளப்பெருக்கிலும் சிக்கி மரண அவஸ்தையை அனுபவித்துவருகிறார்கள்.

ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி, விடாமல் பெய்துவரும் மழையால் ஏற்பட்ட உயிரிழப்பு 256-க்கு மேல் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மிகுந்த சோகத்துடன் அறிவித்திருக்கிறார். மழைநீர் வடிந்த பிறகு, சரிந்துவிழுந்த நிலப்பரப்பைக் கிளறிப் பார்த்தால்தான் எத்தனைப் பேர் இறந்திருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியும். மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் 58 அணைகள், நீர்வள ஆதார அமைப்பின்கீழ் 22 அணைகள் என மொத்தம் 80 அணைகள் கேரளாவில் உள்ளன. அனைத்து அணைகளும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டுள்ளன. காட்டாற்று வெள்ளம், அணை திறப்பால் ஏற்பட்ட வெள்ளம், திடீரென ஏற்படும் நிலச்சரிவு என ஒட்டுமொத்த மாநிலமும் துவம்சமாகிக் கிடக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick