‘அன்புள்ள துணை தேவை’ - மறுமணத் தூண்டில் போட்ட மோசடி மன்னன் | Remarried Cheating man - Junior Vikatan | ஜூனியர் விகடன்

‘அன்புள்ள துணை தேவை’ - மறுமணத் தூண்டில் போட்ட மோசடி மன்னன்

விவாகரத்து பெற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள்... மோசமான திருடர்களுக்குக்கூட இப்படிப்பட்ட பெண்களை ஏமாற்ற மனம் வராது. ஆனால், இப்படிப்பட்ட பெண்களைத் தேடித் தேடி ஏமாற்றியிருக்கிறார் முருகன். இதற்காக, திருமணம் என்ற வலையை அவர் விரித்தார். 58 வயதாகும் முருகன், தன் வயதை மாற்றி மாற்றி ‘மணமகள் தேவை’ விளம்பரம் கொடுப்பார். ‘மறுமணம். மாதம் 50,000 வருமானம், சொந்த வீடு. விதவை (அ) விவாகரத்தான அன்புள்ள துணை தேவை. ஜாதி தடையில்லை’ என்று அந்த விளம்பர வாசகம் இருக்கும். ‘‘விளம்பரத்தைப் பார்த்து தொடர்புகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியிருக்கிறார் இந்த மனிதர்’’ என்கிறது போலீஸ்.

இந்தப் பெண்களில் யாரையும் இவர் திருமணம் செய்துகொண்டதில்லை என்பது ஆச்சர்ய விநோதம். இவருக்குத் தேவை, அவர்களிடம் உள்ள பணமும் நகையும் மட்டுமே! அன்பாகப் பேசி அவற்றைப் பிடுங்கிக்கொண்டு அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியாவுக்குப் போய்விடுவார். முருகனின் இந்த முகம், அவரின் மனைவிக்கும் இரு பிள்ளைகளுக்கும் தெரியாது. அவர்களுக்கு, இப்படி ‘சம்பாதித்த’ பணத்தில் சொந்த வீடு வாங்கிக்கொடுத்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick