‘மூன்று மாதங்களாக செக்ஸ் டார்ச்சர்!’ - கதறும் பெண் எஸ்.பி... சிக்கலில் ஐ.ஜி | IG sex torture on women SP - Junior Vikatan | ஜூனியர் விகடன்

‘மூன்று மாதங்களாக செக்ஸ் டார்ச்சர்!’ - கதறும் பெண் எஸ்.பி... சிக்கலில் ஐ.ஜி

‘`தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் (டி.வி.ஏ.சி) ஐ.ஜி-யான முருகன் ஐ.பி.எஸ், எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார்’’ என்று எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள ஓர் உயரதிகாரி எழுப்பியுள்ள குற்றச்சாட்டால், தமிழகக் காவல்துறையே அதிர்ந்துகிடக்கிறது.

மாநில போலீஸ் சர்வீஸ் மூலம் ஐ.பி.எஸ் அந்தஸ்தைப் பெற்றவர் முருகன். சி.பி.ஐ-யிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அந்த வரிசையில், டி.வி.ஏ.சி பிரிவு ஐ.ஜி பதவியில் பணியாற்றி வருகிறார். மாநிலம் முழுக்க உள்ள லஞ்ச ஊழல் வழக்குகளையும் விசாரித்து வருகிறார். இந்நிலையில்தான், அவர்மீது இப்படி செக்ஸ் டார்ச்சர் புகார்.

சென்னை, ஆலந்தூரில் உள்ள டி.வி.ஏ.சி அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் ஐ.ஜி முருகனின் அறை உள்ளது. அந்த அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளிடம் இதுபற்றி விசாரித்தோம். ‘‘கடந்த மாதத்தில் ஒருநாள் அந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாலை நேரம், ஐ.ஜி-யின் அறைக்கு அந்தப் பெண் அதிகாரி போயிருக்கிறார். திடீரென அவரை நோக்கிவந்த முருகன், அறையின் உள்பக்கமாக தாழ்ப்பாளை லாக் செய்துவிட்டு கட்டிப்பிடிக்க முயற்சி செய்துள்ளார். கடும் எதிர்ப்பு தெரிவித்துப் பெரும் போராட்டத்துக்குப் பிறகு அவர் வெளியே ஓடிவந்துள்ளார். அந்தப் பெண் அதிகாரி மீது முருகனுக்கு ஆசை. வேலை தொடர்பான காரணங்களைச் சொல்லி அலுவலகத்துக்கு வரவழைத்து, திடீரெனப் பேச்சை மாற்றி அவரது அழகை வர்ணிப்பாராம் முருகன். இரவில் போன் செய்து வளவளவென்று பேசுவாராம். மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த டார்ச்சர் இருந்துள்ளது. உயர் அதிகாரி என்பதால் பொறுமைகாத்தவர், முருகனின் டார்ச்சர் உச்சகட்டத்தை அடைந்ததும் அழுது புலம்பியிருக்கிறார். போலீஸ் டி.ஜி.பி மற்றும்  டி.வி.ஏ.சி-யின் டி.ஜி.பி ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளார். பத்து நாள்கள் ஆகியும் எந்தப் பதிலும் இல்லாததால், உள்துறை செயலாளருக்கு புகாரை அனுப்பியுள்ளார். அங்கும் எந்த விசாரணையும் நடக்கவில்லை. அதனால், முதல்வரின் செயலாளருக்கு புகார் தெரிவித்துள்ளார். அதன் பிறகும், எதுவும் நடக்கவில்லை. அதனால், விடுப்பில் சென்றுவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick