சிமென்ட் தொழிற்சாலையில் எரியும் பிளாஸ்டிக்... அச்சத்தில் அரியலுர் மக்கள்!

பிளாஸ்டிக் கழிவுகளின் பேராபத்தை உணர்ந்த தமிழக அரசு, 2019 ஜனவரியிலிருந்து சில விதிவிலக்குகளுடன் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்க முடிவுசெய்திருக்கிறது. ஆனால், ஏற்கெனவே பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகள் மலை மலையாக நகரப்பகுதிகளில் குவிந்துகிடக்கின்றன. இந்த பிளாஸ்டிக்கை சிமென்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இது, புது சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

இந்தியாவில் 54 சிமென்ட் தொழிற்சாலைகள் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாகப் பயன்படுத்து கின்றன. தமிழகத்தில் அரியலூரில் உள்ள டால்மியா பாரத் சிமென்ட், செட்டிநாடு சிமென்ட், அல்ட்ரா டெக் சிமென்ட் என மூன்று தொழிற்சாலைகள் இதைச் செய்கின்றன. இந்தியாவின் பிற பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே சிமென்ட் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், ஒரே பகுதியில் ஆறு சிமென்ட் தொழிற்சாலைகள் இயங்குவது அரியலூர் மாவட்டத்தில் மட்டும்தான். சிமென்ட் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் போராடிவரும் நிலையில், தற்போது மூன்று தொழிற்சாலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாகப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால். அரியலூர் மக்கள் பெரும் கொதிப்பில் இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்