11% கமிஷன் தோற்றது... 14% கமிஷன் வென்றது...

அமைச்சர்கள்மீது அதிரடி குற்றச்சாட்டு!

மிழக அரசின் பொதுப்பணித் துறையில், ஒரு பணிக்கான டெண்டர் விடப்பட்டுப் பணியை கான்ட்ராக்டர் தொடங்கிய பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால் அந்தப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கமிஷன் பிரித்துக்கொள்வதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், அதிகாரிகள் ஆகியோரிடையே ஏற்பட்ட பிரச்னைதான் இதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு பரபரக்கிறது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 110 விதியின்கீழ் பொதுப்பணித் துறையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டகலூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் 16 வகுப்பறைகள் மற்றும் இரண்டு ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு மூன்று கோடியே 30 லட்சம் ரூபாய்க்கும், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 20 வகுப்பறைகள் மற்றும் நான்கு ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு மூன்று கோடியே 45 லட்சம் ரூபாய்க்கும், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 16 வகுப்பறைகள் மற்றும் நான்கு ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு மூன்று கோடியே 35 லட்சம் ரூபாய்க்கும் டெண்டர் அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிகள் தொடர்பாகத்தான் பிரச்னை எழுந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்