கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior vikatan | ஜூனியர் விகடன்

கழுகார் பதில்கள்!

@திருமூர்த்தி.

எடப்பாடி பழனிசாமி நினைத்திருந்தால், கோர்ட்டுக்குப் போகாமலேயே மெரினாவில் இடம் கொடுத்திருக்கலாம். ஆனால், ஏன் அப்படிச் செய்யவில்லை?

கேட்டதுமே கொடுத்திருந்தால், ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான வழக்குகள் வாபஸாகி இருக்குமா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

ஆர்.சுப்ரமணியன், சென்னை.

திண்டுக்கல் சீனிவாசன் தெரிந்தேதான் உளறுகிறாரா? அல்லது தெரியாமல் உளறுகிறாரா?

தெரிந்ததைத்தான் உளறுகிறார்!

மல்லிகா குரு, சென்னை-33.

ஒரு கூட்டம், மாநாடு ஆகியவற்றில், ‘இத்தனை லட்சம் மக்கள் வந்திருக்கிறார்கள்’ என்று எப்படி எண்ணுகிறார்கள்?

ஒரு மனிதன் நிற்பதற்கு சராசரியாக ஒரு சதுர அடி தேவை என்று வைத்துக்கொள்வோம். 100 சதுர அடி என்றால், 100 பேர் அல்லது அதைவிட சற்றே கூடுதலான மனிதர்கள் நிற்கமுடியும். மக்கள் கூடியிருக்கும் இடத்தின் பரப்பளவைக் கணக்கிட்டு, அதனடிப்படையில் கூடிய மக்கள் எவ்வளவு பேர் எனக் கணக்கெடுப்பார்கள். இதெல்லாம் கஷ்டமான கணக்கு. நம் ஊரில் எத்தனை பிரியாணி பாக்கெட், எத்தனை குவாட்டர், எத்தனை 250 ரூபாய் சப்ளை செய்தோம் என்பதை வைத்தே மிக எளிதாகக் கணக்குப் போட்டுவிடுகிறார்களே.

வே.ந.கதிர்வேல், காட்பாடி.

‘இந்திய மக்களுக்குக் கடவுள் வழங்கிய கொடைதான் பிரதமர் நரேந்திர மோடி’ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறாரே மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சவுகான்?

மோடியைக் கடவுள் என்று சொன்னாலும்கூட ஆச்சர்யப்பட வேண்டாம். இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. சவுகான், மீண்டும் முதல்வராக வேண்டுமென்றால், இதற்கு மேலேயும் பேசித்தானே ஆகவேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick