மிஸ்டர் கழுகு: ‘அறிவாலயத்தைக் கைப்பற்ற ஐம்பதாயிரம் பேரா?’

‘‘ஒரு பக்கம் தண்ணீர் பெருக்கெடுக்கிறது... மறுபக்கம் கண்ணீர் பெருக்கெடுக்கிறது’’ என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார்.

“என்ன கேரளாவை நினைத்துக் கண்ணீர் வடிக்கின்றீரோ..?’’ என்று கேட்டோம்.

“நான் சொல்ல வருவது, காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீர் காவியம். இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு பெருக்கெடுத்துள்ளது காவிரி. ஆனால், மொத்த நீரையும் முக்கொம்பிலிருந்து கொள்ளிடத்தில் திறந்துவிட்டு, கடலில் கொண்டுபோய் சேர்த்துவிட்டது அ.தி.மு.க அரசு. காவிரியின் தென் கரைப் பகுதியில் உள்ள முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பூதலூர், செங்கிப்பட்டி, பேராவூரணி என்று பல ஊர்களிலும் இதுதான் நிலை. கிளையாறுகள், கால்வாய்கள், குளங்கள் என எதையுமே தூர்வாரவில்லை. தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால், அதுவாகவே ஓரளவுக்கு வழியை ஏற்படுத்திக்கொண்டு ஓடியிருக்கும். அதையும் செய்யவில்லை.’’

“கீழ்மட்ட அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லையோ?’’

“ம்க்கும்... மேலிடத்தில் இருப்பவர்களிடமே ஒருங்கிணைப்பு இல்லை. ‘கடைமடை வரை தண்ணீர் சேர்ந்துவிட்டது. இந்த ஆண்டு காவிரி டெல்டா விவசாயிகள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்’ என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் சொல்ல, அதேநாளில் இன்னொரு ஊரில் நின்றுகொண்டு, ‘கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் போய்ச் சேர்வதை உறுதிப்படுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளோம். விரைவில் கடைமடைக்கு தண்ணீர் போய்ச் சேர்ந்துவிடும்’ என்கிறார் முதல்வர் ஈ.பி.எஸ். இந்த லட்சணத்தில் கீழ்மட்ட அதிகாரிகளை என்னவென்று சொல்வது?’’

“ம்... தமிழகத்தின் தலையெழுத்து’’ என்றபடியே, அறிவாலயச் செய்திகளுக்கு கழுகாரை மடைமாற்றினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick