“ரஜினிமீது அரசியல்வாதிகள் ஆத்திரப்படுவது ஏன்?” | Rajini's Brother Sathyanarayana Rao interview - Junior vikatan | ஜூனியர் விகடன்

“ரஜினிமீது அரசியல்வாதிகள் ஆத்திரப்படுவது ஏன்?”

ரகசியம் சொல்கிறார் ரஜினியின் அண்ணன்

ரபரப்பான அரசியல் சூழலில் காந்தியச் சிந்தனையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ரஜினியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் ரஜினி சார்பாக அவரின் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் கலந்துகொண்டார். சத்தமில்லாமல் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இந்தச் சந்திப்பும் பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது.

நெல்லை மாவட்டம், கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைக்கு அருகில் உள்ள கிராமம், வெங்காடம்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த திருமாறன், ரஜினிகாந்த் ரத்த தானக் கழகம் அமைத்து 1,35,000 உறுப்பினர்களைச் சேர்த்துள்ளார். அதிக அளவில் ரத்தக் கொடை வழங்கியதற்காக உலகச் சாதனை படைத்திருக்கிறது இந்த அமைப்பு. ரஜினியின் தீவிர ரசிகரான திருமாறன் ஏற்பாட்டில் காந்தியவாதியும் தமிழ்நாடு சர்வோதய மண்டல் தலைவருமான கே.எம்.நடராஜன், காந்தியச் சிந்தனையாளரான செங்கோட்டை விவேகானந்தன், அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், காந்தியவாதி பாலு ஆகியோருடன் ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட், கர்நாடக மாநில ரஜினி ரசிகர் மன்றத் தலைவரான கிருஷ்ணாஜி ராவ், குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஆர்.எஸ்.ராஜன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick