“ஜெயலலிதாவை மன்னித்த பெருந்தன்மை மனிதர்!” | Thirunavukkarasar shares about Vajpayee memories - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“ஜெயலலிதாவை மன்னித்த பெருந்தன்மை மனிதர்!”

மனம்திறக்கும் திருநாவுக்கரசர்

‘‘தேசத்தின் உயர்வை எப்போதும் தன் கண்கள்போல நேசித்த அடல் பிஹாரி வாஜ்பாய், தமிழகத்தின்மீது நீங்காத அன்பு வைத்திருந்தார். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரை மதித்த அவர், இலங்கைத் தமிழர்கள்மீது அளவிலாத அன்பு கொண்டிருந்தார். ஈழத்தமிழர்கள் பிரச்னையில் தமிழக தலைவர்கள் சொன்ன ஆலோசனைகளைக் கேட்டு வாஜ்பாய் செயல்பட்டார். ஜெயலலிதாவால் பி.ஜே.பி ஆட்சி வீழ்ந்தாலும், அந்த ஜெயலலிதாவை மன்னித்த பெருந்தன்மையை வேறு யாரிடமும் பார்க்கவே முடியாது. அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்கியது அவர்தான். வாஜ்பாய் அரசியல் வரலாற்றைத் தமிழகம் இல்லாமல் எழுதவே முடியாது’’ என்று புகழ்மாலை சூட்டுகிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர். டெல்லியில் வாஜ்பாய் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய அவரிடம் பேசினோம்.

‘‘1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க துணையுடன் ஆட்சி அமைத்தார் வாஜ்பாய். ஆட்சிக்கு அளித்த ஆதரவை 13 மாதங்களில் ஜெயலலிதா வாபஸ் பெற்றார். அ.தி.மு.க விலகியதால், தி.மு.க எம்.பி-க்கள் ஆதரவு தர முன்வந்தார்கள். அப்போது, ஜி.கே.மூப்பனார் தலைமையில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று எம்.பி-க்கள் இருந்தனர். அந்த எம்.பி-க்கள் ஆதரவைப் பெற பி.ஜே.பி பகீரத முயற்சி எடுத்தது. ஆனால், மூப்பனார் இசைவு தரவில்லை. அப்போது, எம்.ஜி.ஆர் அ.தி.மு.க என்ற கட்சியை நான் நடத்திக்கொண்டிருந்தேன். மத்திய அமைச்சர்களாக இருந்த ராம்ஜெத்மலானி, வெங்கய்ய நாயுடு ஆகியோர் என்னை சந்தித்தினர். அ.தி.மு.க எம்.பி-க்கள் சிலரை உடைத்து இழுக்க பி.ஜே.பி முயற்சி எடுத்தது. அனைத்து எம்.பி-க்களையும் டெல்லிக்கு அழைத்துச்சென்று ஒரு நட்சத்திர ஹோட்டலில் கட்டுக்காவலுடன் தங்கவைத்தார் ஜெயலலிதா. ஒற்றை ஓட்டில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. ஜெயலலிதா யார் என்பதை பி.ஜே.பி தெரிந்துகொண்டது. ‘மதவாதக் கட்சி’ என்று பேசிவந்த தி.மு.க-வுக்கும் அதன்பின் மனமாற்றம் ஏற்பட்டு, பி.ஜே.பி-யுடன் உறவு ஏற்பட்டது. மீண்டும் வாஜ்பாய் ஆட்சி அமைந்தது. இப்படி அ.தி.மு.க., தி.மு.க என்ற இரண்டு கட்சிகள்தான் வாஜ்பாயின் அரசியல் வரலாற்றில் முக்கிய அத்தியாயத்தை எழுதின. பி.ஜே.பி-யின் வீழ்ச்சியும் வளர்ச்சியும் தமிழகத்தால்தான் அரங்கேறின.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick