திருவாரூரில் மோதும் சசிகலா உறவுகள்!

தி.மு.க தலைவர் மு.கருணாநிதி காலமானதைத் தொடர்ந்து திருவாரூரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில், தி.மு.க - அ.தி.மு.க மோதலைக் காட்டிலும் தினகரன் - திவாகரன் மோதல் பலமாக இருக்கும் என்கிறார்கள் திருவாரூர் அரசியல் வட்டாரத்தில்.

கருணாநிதி காலமானதால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான ஏ.கே.போஸ் மரணமடைந்ததால் திருப்பரங்குன்றனம் தொகுதி காலியாக உள்ளது. விதிப்படி, இங்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், திருவாரூரில் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர். கடந்த வாரம் தஞ்சாவூர் வந்திருந்த தினகரன், “திருப்பரங்குன்றம், எனக்கு நன்கு பழக்கப்பட்ட தொகுதி. அங்கு நமக்கு வெற்றி வாய்ப்புப் பிரகாசமாக உள்ளது. ஆனால், திருவாரூர் தொகுதியில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருவாரூரில் வெற்றிபெறுவதன் மூலம் திவாகரனின் அரசியல் ஆட்டத்துக்கு முடிவுகட்ட வேண்டும்” எனத் தன் கட்சி நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick