வென்றது எடப்பாடி வியூகம்... வீழ்ந்தது பன்னீர் திட்டம்!

‘அணிகள் இணையவில்லை. ஓ.பி.எஸ் என்ற தனிமனிதர் மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார்’ என்று ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகள் இணைந்து ஓர் ஆண்டை நிறைவடைந்ததையொட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்தைப் பகிர்ந்துள்ளார் கே.சி.பழனிசாமி.

அணிகள் இணைந்த பிறகு அ.தி.மு.க-வில் பன்னீர்செல்வத்துக்கு வீழ்ச்சியும், எடப்பாடி பழனிசாமிக்கு எழுச்சியும் ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க வட்டாரத்தில் பேச்சு உள்ளது. ஜெ. மரணத்துக்குப் பிறகு சசிகலா குடும்பத்துக்கு எதிராக பன்னீர்செல்வம் தொடங்கிய தர்மயுத்தம், அவருக்குப் பரவலான ஆதரவைப் பெற்றுத்தந்தது. சசிகலா தரப்புக்கே அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால், எடப்பாடி அணியியுடன் பன்னீர் செல்வம் இணைந்த பிறகு அவரது அரசியல் கிராஃப் சரிய ஆரம்பித்தது.

அ.தி.மு.க - உடைந்தபோது, சசிகலா அணி - பன்னீர் அணி என்ற இரு அணிகள் மட்டுமே களத்தில் இருந்தன. ஒரு கட்டத்தில் சசிகலா அணியிலிருந்து வெளியேறிய எடப்பாடி, அணியும் இல்லாமல் சின்னமும் இல்லாமல் இருந்தார். இரட்டை மின்விளக்கு சின்னத்தையும், புரட்சித் தலைவி அம்மா அணி என்ற பெயரையும் கையில் வைத்திருந்த பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார். அது பன்னீருக்கு பலமாகும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால், அதைத் தனக்கு பலமாக மாற்றிக் கொண்டார் எடப்பாடி. மக்கள் செல்வாக்குடன் தர்மயுத்ததில் களம் இறங்கியவரின் நிலை, சரிவுக்கு உள்ளானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick