“எடப்பாடி பழனிசாமி எனக்கு நெருக்கம்!” - ‘சதுரங்க வேட்டை’ ஆடும் சாமியார் | Edappadi Palaniasamy is close to me says Nandeesha - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“எடப்பாடி பழனிசாமி எனக்கு நெருக்கம்!” - ‘சதுரங்க வேட்டை’ ஆடும் சாமியார்

‘சிவன் பெயரில் சதுரங்க வேட்டை’ எனும் தலைப்பில் அனுபூதி சமாஜம் சாமியார் நந்திஷாவின் மோசடிகள் குறித்து ஜூ.வி-யில் எழுதியிருந்தோம். பலரை அவர் ஏமாற்றியிருப்பதாக, தமிழகம் முழுவதுமிருந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், சாமியார் நந்திஷாவும் அவரின் கூட்டாளி குமரவேலுவும் செக் மோசடி வழக்கில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார்கள்.

நந்திஷா மீது திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார், திருப்பூர் மாவட்டம் பூசாரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி. இதுகுறித்து நந்திஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, “நான் மத்திய அரசுடன் நெருக்கமாக உள்ளேன். அதைவிட, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எனக்கு மிகவும் நெருக்கம். அவர்கள் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய திட்டங்களை வழிநடத்தப்போகிறேன். என்னிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது” என்று சொல்லி திகைக்க வைத்தாராம். 

துரைசாமியிடம் பேசினோம். “நந்திஷாவிடம் பணம் கொடுத்துவிட்டு திருப்பி வாங்க முடியாமல், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவர் மன உளைச்சலில் இறந்துவிட்டார். தகவலறிந்த நந்திஷா, பிரிட்டோ குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி கொடுப்பதாகக் கூறியிருக்கிறார். அரசு பதவிகளில் இருந்தவர்கள், ஆளும்கட்சியினர் என பலரும் நந்திஷாவிடம் பல லட்சங்களை இழந்துவிட்டு புலம்பித் தவிக்கிறார்கள். பாழடைந்த கோயில்களைக் காப்பாற்றுகிறேன் என்றவர், இப்போது அரசியலில் குதிக்கப்போகிறேன் என்கிறார். அனுபூதி மருத்துவம், ரூ.5 கோடி மதிப்பில் அன்னதானத் திட்டம், அனுபூதி கடன் வழங்கும் திட்டம் என வகைவகையாக ஏமாற்ற ஆரம்பித்துள்ளார்” என்றார் வேதனையுடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick