அமைச்சர் தொகுதியில்... பள்ளிக்கூடத்துக்காக போராடும் கிராமம்!

ரு கோயிலைப் பள்ளிக்கூடமாக மாற்றி அரசைப் பதறவைத்திருக்கிறார்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவேலன்குடி கிராம மக்கள்.

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே உள்ள இந்த கிராமத்தில். 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆனால், பள்ளிக்கூடம் கிடையாது. இங்கிருந்து 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் வெளியூருக்குப் போய் படித்துவிட்டு வருகிறார்கள். தங்கள் ஊரில் அரசு ஆரம்பப் பள்ளியை ஏற்படுத்த வேண்டுமென்று அரசிடம் பலமுறை மக்கள் முறையிட்டும் பயனில்லை. அதனால் விரக்தியடைந்த மக்கள், ஓர் அதிரடி முடிவை எடுத்தனர். தங்கள் ஊரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலையே பள்ளிக்கூடமாக மாற்றி, தங்கள் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தருவது என்பதுதான் அந்த முடிவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick