“உணவுப் பஞ்சத்தைத் தீர்க்கும் பனங்கிழங்கு அரிசி!” - பரவும் பனைமர இயக்கம் | Palmyra tuber solves food shortages - Thirumavalavan Birthday Resolution - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“உணவுப் பஞ்சத்தைத் தீர்க்கும் பனங்கிழங்கு அரிசி!” - பரவும் பனைமர இயக்கம்

ன் பிறந்தநாளில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பனை விதைகளை விதைத்து, பனைமரம்மீது அனைவரின் கவனத்தையும் திருப்பியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். கோடிக்கணக்கில் பனைமரங்களை வளர்ப்பது என்பதை நோக்கமாகக் கொண்டு இதை ஓர் இயக்கமாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து வி.சி.க-வின் செய்தித்தொடர்பாளர் வன்னி அரசுவிடம் பேசினோம். “சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை அமைப்பதால், ஒரு லட்சம் மரங்கள் அழிக்கப்படுகின்றன. அவற்றில் பனைமரங்களும், தென்னை மரங்களுமே அதிகமாக அழிக்கப்படுகின்றன. எட்டுவழிச் சாலைக்கு எதிராகப் போராடும் நாம், ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக, பனைமரம் நடும் முயற்சியை திருமாவளவன் கையிலெடுத்தார். பனைமரம் நடுவதைப் பரவல் செய்ய வேண்டும் என்பதற்காக, பனைமரம் நடும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களை அழைத்து, எங்கள் மாவட்டச் செயலாளர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார் தலைவர். ‘பனை நாடு’ அமைப்பின் ஜெகத் கஸ்பர், அரியலூரில் தனி ஒருவராக ஒரு லட்சம் பனை விதைகளை நட்ட பிரேம் ஆனந்த், பூவுலகின் நண்பர்கள், பனைமர ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளிடம் பேசி, அவர்களை வைத்துப் பயிற்சி அளித்தோம். மீண்டெழும் குமரி திட்ட இயக்குநர் தாமஸ் பிராங்கோ பங்கேற்றார். பனை விதைகளை எப்படிச் சேகரிக்க வேண்டும் என பிரேம் ஆனந்த் கற்றுக்கொடுத்தார். பனையின் பலன்கள் குறித்து ஜெகத் கஸ்பர் எடுத்துரைத்தார். தனது பிறந்தநாளில் ஆக்கப்பூர்வமான ஒரு பணியைச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன், பனைமரம் நடுவதை ஓர் இயக்கமாகவே செய்கிறார் திருமாவளவன். அவர் ஈழத்துக்குச் சென்றிருந்தபோது, வீடுகளுக்கும் தோட்டங்களுக்கும் பனைமரங்களை அரணாக வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறார். பனைமரம் நடுவதற்கான உந்துதல் அங்குதான் அவருக்குக் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் 30 கோடி பனைமரங்கள் இருந்ததாக ஒரு கணக்கு இருந்தது. இப்போது, வெறும் மூன்று கோடி பனைமரங்கள்தான் உள்ளனவாம். எனவே, எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளில் குறைந்தது நூறு பனைக்கன்றுகளை நட வேண்டும் என திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick